சிவப்பு ரோஜா

 குங்கும சிவப்பை போற்றும் உள்ளம் 

பெண்மையின் உதிரச் சிவப்பை ஒதுக்குவதேன்? 

இரண்டுமே இயற்கை எனில் 

சிவப்பு ரோஜாவை வர்ணித்து கவிதை எழுதும் மனம்

 பெண்ணின் மாதாந்திர சுழற்சி கண்டு முகம் சுழிப்பதேன்? 

ஒய்வெடு என கூறலாம் 

ஓரமாய் இரு என கூறலாமா ? 

ஓரமாய் இரு என்று கூட சொல்லலாம் 

ஒய்யாரமாய் இரு என்பது தவறன்றோ ? 

சத்தம் இல்லா சங்கடங்கள் 

குறுகுறு ஒரபார்வை 

உண்மையான உதாசீனம் 

பெண்ணிற்கு என்றும் உண்டோ ?


Comments

Popular posts from this blog

En Katta Paiye

Daddy Dearest