குங்கும சிவப்பை போற்றும் உள்ளம் பெண்மையின் உதிரச் சிவப்பை ஒதுக்குவதேன்? இரண்டுமே இயற்கை எனில் சிவப்பு ரோஜாவை வர்ணித்து கவிதை எழுதும் மனம் பெண்ணின் மாதாந்திர சுழற்சி கண்டு முகம் சுழிப்பதேன்? ஒய்வெடு என கூறலாம் ஓரமாய் இரு என கூறலாமா ? ஓரமாய் இரு என்று கூட சொல்லலாம் ஒய்யாரமாய் இரு என்பது தவறன்றோ ? சத்தம் இல்லா சங்கடங்கள் குறுகுறு ஒரபார்வை உண்மையான உதாசீனம் பெண்ணிற்கு என்றும் உண்டோ ?